
நான்கு வரியில் கவிதைகள்
என் வீட்டின்
வறுமை
எனது செருப்பில் தெரிகிறது
பல்லை இளித்துக் கொண்டு.
நண்பனைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?
நாலு காசு கொடுத்து வாங்குங்கள்
நச்சென்று புரியும்
நண்பன் தானா என்று.
ஊஞ்சலில்
நீ ஆடுகிறாய் உற்சாகமாய்
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை
என் உயிர் ஊசலாடுவதை.
கால் முளைத்த
நந்தவனம் என் கண்ணருகில்
எனை கடந்து செல்வது போல்
நீ நடந்து போகிறாய்.
2 comments:
உங்கள் எல்லாக் கவிதைகளும் அருமை. வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சிவபிரியன்.உங்கள் வாழ்த்து என்னை வழுவேற்றும்.
Post a Comment