Thursday, 1 March 2012

கையடக்கக் கம்சன்

கை பேசி
இவன் கையடக்கக் கம்சன்.

சென்னைவாசிகளின்
கைகளை கவர்ந்து
காதிற்குள் நுழைந்து
கண்களையும் கட்டிவைக்கும்
கந்தப் பொருள்.

மனிதர்களை
மனிதப் பொம்மைகளாய்
மாற்றிடும் மாயப் பொருள்.

அருகில் நிற்பது
அஃறிணையா? உயர்திணையா?
என்றறியக் கூட மனமின்றி
கைபெசிகளின் கடிவாளத்தில்
இன்றைய இயந்திர இளைஞர்கள்.