Sunday, 24 January 2010

வேண்டும் மீண்டும் ஓர் சுதந்திர போர்



வேண்டும் மீண்டும் ஓர் சுதந்திர போர்


வேண்டும்.!
மீண்டும் ஓர் சுதந்திர போர்।

அடிமைத் தனத்தை எதிர்த்து
மதத்தின் பெயரால்
மனித உயிர்கள் பலியாவதை எதிர்த்து
சாதியின் பெயரால்...
இனத்தின் பெயரால்....
உழைப்பாளி மக்களைச் சுரண்டிடும்
ஊழல் வாதிகளை எதிர்த்து
வேண்டும்
மீண்டும் ஓர் சுதந்திர போர்.

சொந்த நாட்டிலே
அன்னியரைப்போல்-எம்
தொழிலாளிக்கு எந்த
உரிமையும்
கிடையாதாம் -
உழைக்க
மட்டும் தான் உரிமையாம்।

ஒன்றுபட-
உரிமைகளைக் கேட்க
உரிமையே கிடையாதாம்.

கொக்கரிக்கிறது
ஆட்சியாளர்களுடன் சேர்ந்து கொண்டு
அந்நிய நிறுவனங்கள்.

தொழிலாளி வர்க்கம்
பெற்ற உரிமைகள் யாவும்
சேவித்துப் பெற்றதில்லை.
யாரிடமும்....
சேவகம் புரிந்தும் பெற்றதில்லை.


பெற்ற உரிமைகள் யாவும்
உழைக்கும் வர்க்கம்
உதிரம் மட்டுமல்ல-பல
உயிரையும் கொடுத்துப் பெற்றதாகும்.


உரிமை காத்திடவே
ஓராயிரம் சிறை நிரப்புவோம்.

செங்கொடி கரங்கள் உயர்ந்தே
உங்கள் செயலைத் தடுத்திடும்.


உண்மைகளை உரைத்தே
மக்கள் சக்தி திரட்டிடும்-எம்
இயக்கம் வெற்றி பெற்றிடும்.


மீண்டும் ...
ஓர் சுதந்திரப் போரில்
உழைக்கும் வர்க்கம் உரிமை பெற்றிடும்.

2 comments:

Unknown said...

நான் ஏதோ இந்தியாவில் மனித பிறப்பு ஊரிமை மழுங்கியாதாக நினைத்திருந்தேன் .....இல்லை என்று கூறுகிறாய்



கிரீசன்.ப.அ.

Unknown said...

நன்றி pullatgireesan,இந்தியாவில் பிறப்புரிமை உண்டு.அதில் சந்தேகம் வேண்டாம்.அதை வைத்துத் தானே வெளி நாட்டுக்காரன் வியாபாரம் செய்ய வருவான்.

Post a Comment