எத்தனையோ முறை
கூறி யிருக்கிறாய்.
என்னை மறந்துவிடு என்று.
எத்தனையோ முறை
எண்ணி யிருக்கிறேன்
உன்னை மறக்க வேண்டும் என்று.
என்னை மறக்கச் சொன்ன நீயும்
உன்னை மறக்க எண்ணிய நானும்
மறக்கவே யில்லை-நாம்
மறக்க எண்ணியதை.
மறப்பது என்பதையாவது-இனி
நாம் மறப்போமா?.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment